PAS–BERSATU இடையே அரசியல் ‘அமைதி ஒப்பந்தம்’ கோரிக்கை
- Tamil Malar (Reporter)
- 02 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 2-
பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைவர் பதவி தொடர்பாக PAS மற்றும் BERSATU கட்சிகளுக்கிடையே கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வரும் கருத்து வேறுபாடுகள், கூட்டணியின் அரசியல் பயணத்தில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளதாக PAS தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
PAS தலைவர் தன் அரசியல் செயலாளரான முகமட் சயீர் சே சுலைமான், இரு கட்சிகளும் உடனடியாக அரசியல் மோதல்களை நிறுத்தி, “சமாதானம்” ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். அதே நேரத்தில், BERSATU தலைவர் டான் ஸ்ரீ முஹியிதின் யாசின், தன்னை இன்னும் PN-ன் தலைவர் எனக் கருதினால், உடனடியாக முழு கவுன்சில் (Full Council) கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாசோக் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் சயீர், PN கூட்டணியின் தற்போதைய நிலையை உருவகப்படுத்தி விளக்கினார். “ஒரு மாதத்திற்கும் மேலாக பஸ் ஓட்டுநர் இல்லாததால் பயணம் நின்றுவிட்டது. இதனால் பயணிகள் குழப்பமடைந்து, கூட்டணியின் திசை குறித்து அச்சமடைந்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



