ரமலான் சந்தையில் விலை கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை! அமைச்சர் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 1,

RAMADAN சந்தைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலைகள் கட்டுப்பாட்டுடன் இருப்பதை அமலாக்க அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என கூட்டரசு வளாக அமைச்சர் HANNAH YEO உறுதியளித்தார். ரமலான் சந்தைகளில் வணிகம் செய்யும் வணிகர்கள் அரசு நிர்ணயித்திருக்கும் விலை கட்டுப்பாடுகளை மீறி அதிகமான விலையில் விற்பனை செய்ய வேண்டாம் என்றும் மீறி அதிக லாபத்திற்காக விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டரசு வளாக அமைச்சர் HANNAH YEO எச்சரிக்கை விடுத்தார். 

தலைநகர் கோலாலம்பூரில் ரமலான் சந்தைகளில் ஒவ்வொரு நாளும் கோலாலம்பூர் நகராண்மைக் கழக அதிகாரிகளும் சுகாதார அதிகாரிகளும் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருவதால் உணவின் சுகாதாரத்தின் மீது அக்கறை  கொள்ளும்படி கூட்டரசு வளாக அமைச்சர் HANNAH YEO வணிகர்களுக்கு நினைவூட்டினார். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் விலை KPDN நிர்ணயத்திருக்கும் விலையை விடவும் அதிகமாக இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்க தயங்க வேண்டாம் என கூட்டரசு வளாக அமைச்சர் HANNAH YEO கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *