புதிய வடிவமைப்புடன் மலேசிய கடப்பிதழ், அடையாள அட்டை – ஆறு மாதங்களில் அறிமுகம்
- Tamil Malar (Reporter)
- 08 Jan, 2026
புத்ராஜயா, ஜன. 8-
குடிநுழைவுத் துறை, தேசிய பதிவுத் துறை (JPN) ஆகியவை ஆறு மாதங்களுக்குள் புதிய வடிவமைப்புடன் கூடிய மலேசிய கடப்பிதழ், அடையாள அட்டையை அறிமுகப்படுத்த உள்ளன.
இந்த அடையாள ஆவணங்களில் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்கால தேவைகளுக்கு ஏற்ப ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும், குறிப்பாக MyKad போலியைத் தடுப்பதற்காகவும் செய்யப்படுகிறது.
எனினும், உள்நாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசூதியின் இஸ்மாயில் கூறுகையில், மக்கள் தங்கள் பாஸ்போர்ட், MyKadஐ உடனடியாக புதுப்பிக்க தேவையில்லை என்றார். ஏனெனில், தற்போதைய ஆவணங்கள் காலாவதியாகும் வரை செல்லுபடியாகும்.
இந்த நடவடிக்கை, நாட்டின் அடையாளம், பயண ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் முக்கிய சாதனையாகும் என்று அவர் தெரிவித்தார். இதன்மூலம், போலி ஆவணங்களைத் தடுக்கவும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப ஆவணங்களை மேம்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



