94 சட்டவிரோத வெளிநாட்டினர்களைச் சொந்த நாட்டுக்கு அனுப்பிய குடிநுழைவுத் துறை!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 17,

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர்களில் 94 பேரை அவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பியதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. அனைத்து வெளிநாட்டினர்களும் KLIA 1 & KLIA 2 சர்வதேச விமான நிலையம், செனாய் சர்வதேச விமான நிலையம், பாசிர் கூடாங் படகு முனையம் வழியாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பி அனுப்பப்பட்டிருக்கும் 94 வெளிநாட்டினர்களின் மீதும் முழுமையாக விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அவர்கள் Indonesia, Vietnam, Pakistan, Nepal, இந்தியா, கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் மீண்டும் மலேசியாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தந்த நாடுகளின் தூதரகத்தின் செலவிலும் சொந்த செலவிலும் அவர்கள் நாடு திரும்புவதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *