பாழடைந்த வீட்டிலிருந்த 29 வெளிநாட்டினர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 25,

சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்து பாழடைந்த வீட்டுக்குள் பதுங்கி வாழ்ந்த 29 வெளிநாட்டினர்களைப் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. பகாங் பெந்தோங்கில் வழக்கமானச் சோதனையில் ஈடுபட்ட குடிநுழைவுத் துறையினர் சந்தேகத்திற்குரிய ஆடவர்கள் பாழடைந்த வீட்டுக்குள் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் சம்மந்தப்பட்ட வீட்டுக்குள் சோதனை நடத்திய போது அவர்கள் 29 பேரும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதைக் கண்டறிந்ததாகப் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. 

பெந்தோங்கில் கைவிடப்பட்ட அந்த வீட்டுக்குள் இருந்த 29 வெளிநாட்டினர்களிடமும் எந்தவோர் ஆவணங்கள் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாழடைந்த வீட்டுக்குள் தங்கி துப்புரவு வேலைகளிலும் கட்டுமானத் தொழில்களிலும் அவர்கள் ஈடுபட்டு வந்ததாகத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 29 வெளிநாட்டினர்களும் 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றப்பின்னணிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *