62 வெளிநாட்டினர்கள் போலி ஆவணங்களுடன் கைது!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 24,

தோட்டத் தொழிலில் ஈடுபட்டு வந்த 62 வெளிநாட்டினர்கள் போலி ஆவணங்களைக் கொண்டிருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு குவா மூசாங்கில் உள்ள Lojing தோட்டத்தில் கிளாந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 1 பெண் உட்பட 62 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கிளந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறை இணை இயக்குநர் Mohamed Yusoff Khan தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலி கடப்பிதழ்கள் உட்பட பல்வேறு போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் இதே பகுதியில் சோதனை மேற்கொண்டதில் அனைத்து வெளிநாட்டினர்களிடமும் கடப்பிதழ் இருந்ததாகவும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் தரவிறக்கம் ஆய்வின் சோதனையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டினர்கள் கொண்டிருக்கும் கடப்பிதழ்களும் பணியாளர் நியமன ஆவணங்களும் போலியானவை என கண்டறியப்பட்டிருப்பதாகவும் நேற்றிரவு மீண்டும் சோதனையை மேற்கொண்டதாகவும் கிளந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறை இணை இயக்குநர் Mohamed Yusoff Khan தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *