சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 7,043 வெளிநாட்டினர்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 25 Feb, 2026
பிப்ரவரி 25,
தேசிய குடிநுழைவுத் துறை கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி 19 வரையில் மேற்கொண்ட சோதனையில் 7,043 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய ஒரு வெளிநாட்டுக் கும்பலிடமிருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் ரகசியமாக இச்சோதனை நடவடிக்கையை நாடு முழுவதும் மேற்கொண்டதாகவும் முக்கிய வெளிநாட்டு தொழிலாளர்களைச் சட்டவிரேதமாக மலேசியாவுக்குக் கடத்தும் சிண்டிகெட்டைக் கண்காணித்து வருவதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
INDONESIA, MYANMAR, BANGLADESH, PHILIPHINES, THAILAND, PAKISTAN, INDIA, CHINA ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 30,177 வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் சோதனையை மேற்கொண்டதாகவும் அதில் 4,804 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எந்தவோர் ஆவணங்களுமின்றி மலேசியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் 1,250 வெளிநாட்டினர்கள் காலாவதியானத் தொழிலாளர் உரிமம் வைத்திருந்த குற்றத்திற்காகவும் 806 வெளிநாட்டினர்கள் கடப்பிதழ் இல்லாத குற்றத்திற்காகவும் 183 வெளிநாட்டினர்கள் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகத் தொழிலாளர்களைக் கடத்த உதவியதாகவும் என மொத்தம் 7,043 வெளிநாட்டினர்களைத் தேசிய குடிநுழைவுத் துறை கைது செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



