பாலியல் வழக்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு 8 ஆண்டுகள் சிறை, 2 பிரம்படி! நீதிமன்றம் உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 1,

பேராக்கின் Tronoh சட்டமன்ற உறுப்பினராக இருந்த Paul Yong Choo Kiong பாலியல் வழக்கில் குற்றமற்றவர் என நிரூபிக்க தவறியதால் உயர்நீதிமன்றம் இன்று அவருக்கு 8 ஆண்டுகள் சிறையும் 2 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 2013, 2018 என இரு முறையும் டி.ஏ.பியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த Paul Yong Choo Kiong கடந்த 2019 இந்தோனேசிய பணிப்பெண்ணைப் பாலியன் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். 2019 ஜூலை 17 Paul Yong Choo Kiong கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் நீடித்தார்.

2020 ஜூலை 27 கூட்டரசு நீதிமன்றம் Paul Yong Choo Kiong மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு 13 ஆண்டுகள் சிறையும் 2 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தது. தன் மீதான குற்றத்தை மறுத்து மேல் முறையீடு செய்த Paul Yong Choo Kiong தண்டனையைக் குறைக்கும்படி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில் Paul Yong Choo Kiong குற்றவாளி என நிரூபனமாகியிருப்பதால் மேல் விசாரணை கோரிக்கையை மறுப்பதாகவும் Paul Yong Choo Kiong மீதான தண்டனை 8 ஆண்டுகள் சிறை என்றும் 2 பிரம்படிகளும் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *