30 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! அறுவர் படுகாயம்!
- Thinagaren Sanggaren
- 11 Aug, 2025
ஆகஸ்ட் 11,
இன்று காலை பினாங்கில் உள்ள ஜாலான் பாயா தெருபோங்கில் கட்டுப்பாட்டை இழந்த தொழிலாளர் பேருந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை 7 மணியளவில் ஜாவாவிலிருந்து பாயாதெருபோங் நோக்கிச் செல்லும் மலைப் பாதையில் இந்த விபத்து ஏற்பட்டதாக பினாங்கு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு 8 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் விரைந்ததாக ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
மலையிலிருந்து
இறங்கும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தின் போது
பேருந்தில் 30 தொழிலாளர்கள் பயணித்ததாகவும் அறுவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டிருப்பதாகவும்
ஓட்டுநர் உட்பட 24 பேர் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாகவும் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட
6 தொழிலாளர்களும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 22 முதல் 26 வயதுக்குற்ப்பட்டவர்கள் என தெரிய
வந்துள்ளது. இன்று காலை 8.27 மணிக்கு விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டதாக
பினாங்கு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



