10 அரசியல் தலைவர்கள் மீதான ஆபாசக் காணொலி மிரட்டல்! அரசியல் காழ்ப்புணர்ச்சியா? – காவல்துறை விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 17,

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் செனட்டர்கள் என மொத்தம் 10 அரசியல் தலைவர்கள் தொடர்பான ஆபாசக் காணொலிகள் போலியானவை என்பதைக் காவல்துறை உறுதிப்படுத்தியிருப்பதாகத் தேசிய காவல்துறை தலைவர் Datuk Seri Mohd Khalid Ismail தெரிவித்தார். பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் இருப்பதாகக் காவல்துறை சந்தேகிப்பாதாகவும் அது தொடர்பாக முக்கிய மின்னஞ்சல்கள் அடையாளம் காணப்பட்டு காவல்துறையின் சிறப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தேசிய காவல்துறை தலைவர் Datuk Seri Mohd Khalid Ismail இன்று நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

முன்னதாக 10 அரசியல் தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் கட்சிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் இந்த காணொலிகளைப் பரப்ப வேண்டாம் என்றால் 100,000 அமெரிக்க டாலர்கள் (RM420,000) வழங்க வேண்டும் என மிரட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாகத் தமக்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் பெற்றதைப் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli வெளிப்படையாக அறிவித்திருந்த நிலையில் அவரை அடுத்து SUBANG நாடாளுமன்ற உறுப்பினர் Wong Chen, SUNGAI PETANI நாடாளுமன்ற உறுப்பினர் Dr. Taufiq Johari, HANG TUAH JAYA நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான Adam Adli, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் Kota Anggerik சட்டமன்ற உறுப்பினருமான Najwan Halimi, செனட்டர் Manolan Mohamad, கூலிம் சட்டமன்ற உறுப்பினர் Wong Chia Zen , சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Dr Fahmi Ngah என மொத்தம் 10 அரசியல் தலைவர்கள் மிரட்டல் மின்னஞ்சலைப் பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகத் தேசிய காவல் துறை தலைவர்  Datuk Seri Mohd Khalid Ismail தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *