பெர்லி-தினா உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்!
- Muthu Kumar
- 30 Jul, 2025
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30-
மலேசியாவின் மகளிர் இரட்டையர் பூப்பந்து வீராங்கனைகளான பெர்லி டான், எம். தினா
ஆகஸ்ட் 25 முதல் 31 வரை பாரிஸில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக பெரும் ஊக்கத்தைப் பெற்றுள்ளனர்.
பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட உலக தரவரிசை பட்டியலில், பெர்லி-தினா இணை மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் சீனாவின் சாங்ஷோவில் நடந்த சீன ஓபனில் அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம் இந்த சாதனையை அவர்கள் எட்டினர்.
2009ஆம் ஆண்டு சின் ஈய் ஹுய்-வோங் பெய் ட்டி இணை உலகின் முதல் இடத்தைப் பிடித்த பிறகு, மலேசிய மகளிர் இரட்டையர் இணையாக உலக தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த முதல் இணையாக பெர்லி-தினா பதிவாகியுள்ளனர். இந்தச் சாதனை, மலேசிய பூப்பந்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.
இவர்கள் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் மலேசிய மகளிர் இரட்டையர் இணையாக அரையிறுதிக்கு முன்னேறி, வெண்கலப் பதக்கத்திற்குப் போராடினர்.மேலும், 2022 பிரெஞ்சு ஓபன், காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக, மலேசியாவின் இரண்டாவது இணையான டியோ மெய் சிங்-கோ பெய் கீ, தரவரிசையில் 22வது இடத்திலிருந்து 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். இந்த முன்னேற்றம் அவர்களுக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



