பெர்லி தான்-தினா: பாரிஸ் உலக பேட்மிண்டன் போட்டியின் நம்பிக்கை நட்சத்திரங்கள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 8-

மலேசியாவின் முதன்மை பெண்கள் இரட்டையர் அணியான பெர்லி தான்-எம். தினா, இந்த மாத இறுதியில் பாரிஸில் நடைபெறவுள்ள உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும், உறுதியான வேகத்தையும் தக்கவைத்து. நாட்டிற்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசிய ஓபன், ஜப்பான் ஓபனில் இறுதிப்போட்டிக்கும், சைனா ஓபனில் அரையிறுதிக்கும் முன்னேறிய இந்த உலகின் இரண்டாம் நிலை ஜோடி, சமீபத்திய பல முக்கியமான போட்டிகளில் பாராட்டத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இவர்கள் இப்போது உலக அரங்கில் மலேசியாவின் முதன்மை நம்பிக்கையாக உள்ளனர்.

தேசிய இரட்டையர் பயிற்சி இயக்குநர் ரெக்ஸி மைனாகி, இந்த ஜோடி மீது அதிகப்படியான அழுத்தத்தை வைக்க விரும்பவில்லை என்று கூறினார். மாறாக, அவர்கள் தற்போது பயன்படுத்தி வரும், பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட அணுகுமுறையை தொடர்ந்து பின்பற்றவும், கவனத்தை தக்கவைக்கவும் விரும்புகிறார்.

பெர்லி-தினா இந்த ஆண்டு தாய்லாந்து ஓபனில் வெற்றி பெற்றதுடன், இந்தோனேசிய மாஸ்டர்ஸ், இந்தோனேசிய ஓபன். ஜப்பான் ஓபனில் இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறியுள்ளனர். இந்த சாதனைகள், ஆகஸ்ட் 25 முதல் 31 வரை பாரிஸில் நடைபெறவுள்ள உலக போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் மலேசிய பெண்கள் இரட்டையர் என்ற பெருமையை அவர்களுக்குப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

சீனாவின் லியு ஷெங்ஷு-தான் நிங், ஜியா யி பான்-ஜாங் ஷு ஷியன் போன்ற வலுவான எதிரிகளை எதிர்கொள்ள வேண்டிய சவால் இருந்தாலும், பெர்லி-தினாவின் தற்போதைய உறுதி மற்றும் நம்பிக்கை, வரலாறு படைக்கும் வாய்ப்பை உயர்த்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *