சுபாங் ஜெயா ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை?

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

சுபாங் ஜெயா, ஆக.13: 
சுபாங் ஜெயாவில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. 

காலை 9 மணியளவில் 150க்கும் அதிகமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஸ்ரீ முனீஸ்வரருக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். 
அதன் பிறகு, ஸ்ரீ முனீஸ்வரருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த பூஜை, பூச்சோங் தொழிலதிபர் டத்தோ பத்மநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 
மதியம் 1 மணியளவில் 500க்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு பல்லக்கு ஊர்வலம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.  இங்குள்ள
ஸ்ரீ முனீஸ்வரரின் சிலை 108 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்று ஆலய குருக்கள் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *