கிறிஸ்துமஸ் & பள்ளி விடுமுறைக்கு சிறப்பு ரயில் சேவை! - KTMB அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 21: இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மற்றும் மூன்றாம் பருவ பள்ளி விடுமுறை நாட்களை முன்னிட்டு, மலேசிய ரயில் நிறுவனமான KTMB நான்கு கூடுதல் மின்சார ரயில் சேவைகளை வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் 22,680 டிக்கெட்டுகள் அடங்கும் என்று அறிபித்துள்ளது.

KTMB இன்று ஒரு அறிக்கையில், டிசம்பர் 19 முதல் ஜனவரி 11, 2026 வரை KL சென்ட்ரல்–பாடாங் பெசார் மற்றும் KL சென்ட்ரல்–பட்டர்வொர்த் வழித்தடங்களை உள்ளடக்கிய கூடுதல் சேவைகள் செயல்படும் என்றும், டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு நுழைவு வாயில்கள் மூடப்படும் என்பதால், பயணிகள் குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பே நிலையத்திற்கு வர வேண்டும் என்று நினைவூட்டப்படுவதாக KTMB ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயண அட்டவணைகள் KTMBயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்கள் அல்லது 03-9779 1200 என்ற KTMB அழைப்பு மையத்தைத் தொடர்புகொள்வதன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *