60 குடிநுழைவு அதிகாரிகள் பணிநீக்கம்! அதிகாரிகளுக்கு எதிராக 301 வழக்குகள் நிலுவை!
- Thinagaren Sanggaren
- 18 Sep, 2025
செப்டம்பர் 18,
தேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகளில் இதுவரை 60 அதிகாரிகள் ஒழுங்கு மீறல் குற்றங்களுக்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார். நாட்டின் முக்கிய துறையான குடிநுழைவுத் துறையின் கட்டுப்பாடுகளை மீறியதால் அவர்கள் மீதான புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் எந்த பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக Datuk Zakaria Shaaban தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 254 குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மீதான வழக்குகளில் 199 வழக்குகளின் விசாரணை நிறைவடைந்திருப்பதாகவும் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் துறையான குடிநுழைவுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மட்டுமல்லாது தேசிய எல்லை பாதுகாப்பு ஆணையமான AKPS அதிகாரிகளுடன் தொடர்புடைய வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக Datuk Zakaria Shaaban தெரிவித்தார். குடிநுழைவுத் துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒரு சில போலி புகார்கள் பெறப்பட்டு வருவதையும் Datuk Zakaria Shaaban சுட்டிக்காட்டினார். என்ன மாதிரியான புகார்களைப் பெற்றாலும் தீவிர விசாரணைக்குப் பின்னரே எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban நினைவூட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



