JPJ அதிகாரி பலி! லாரியை மோதிய மோட்டார் சைக்கிள்!

top-news

மே 22,

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்திருந்த நிலையில் லாரியைக் கவனிக்காத மோட்டார் சைக்கிள் லாரியின் பின் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். குவாந்தானிலிருந்து கோலாலம்பூர் செல்லும் நெடுஞ்சாலையின் தொமமெர்லோ அருகில் மாலை 5.16 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாக Temerloh, மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Hassan தெரிவித்தார்.

பலியான மோட்டார் சைக்கிளோட்டி 36 வயது JPJ பணியாளர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 33 வயது லாரி ஓட்டுநர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாக Temerloh, மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Hassan தெரிவித்தார். மழையின் காரணமாக லாரி சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் பின்னாள் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரியை மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் பலியான 36 வயது JPJ அதிகாரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தெமெர்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Seorang pegawai JPJ wanita berusia 36 tahun maut selepas motosikal yang ditunggangnya melanggar lori yang terbabas dan terbalik di lebuh raya dekat Temerloh. Lori terbabas akibat hujan lebat. Pemandu lori hanya mengalami kecederaan ringan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *