RM3,000 லஞ்சம் கேட்ட சுங்க அதிகாரிக்கு RM15,000 அபராதமும் சிறையும்!

top-news

மே 15,

சட்டவிரோதப் பயன்பாட்டில் ஈடுபட்ட மீனவப் படகை விடுவிக்க RM3,000 லஞ்சம் கேட்ட சுங்க அதிகாரிக்கு எதிரான வழக்கில் சிறப்பு Sesyen நீதிமன்றம் ஓராண்டு சிறையும் RM15,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. 56 வயதானச் சுங்கத் துறை தலைமை அதிகாரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இக்குற்றத்தைப் புரிந்ததாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த 2020 செப்டம்பரில் கைது செய்தது, தன் மீதானக் குற்றத்தை மறுத்த சுங்கத் துறை அதிகாரி மேல் முறையீடு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் அக்தோபர் 21 மேல் முறையீடு நீதிமன்றம் வழக்கை விசாரிப்பதாகவும் சிறை தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தியதுடன் தடுப்புக் காவலில் வைக்கும்படியும் சிறப்பு Sesyen நீதிமன்றம் விதித்த RM15,000 அபராதத்தைச் செலுத்தும்படியும் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் மேல் முறையீடு நீதிமன்றம் விசாரணையைத் தொடர ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படியும் அதுவரையில் தடுப்புக் காவலை நீட்டிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Seorang pegawai kanan kastam didapati bersalah meminta rasuah RM3,000 untuk melepaskan bot nelayan haram dan dijatuhi hukuman penjara setahun serta denda RM15,000 oleh Mahkamah Sesyen Khas. Hukuman penjara ditangguhkan sementara menunggu rayuan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *