கடத்தல் & அதிகார மீறலில் ஈடுபடும் அதிகாரிகள் பணி நீக்கம்! - Datuk Seri Shuhaily எச்சரிக்கை!
- Sangeetha K Loganathan
- 08 Jul, 2025
ஜூலை 8,
சட்டவிரோதமாக மலேசியாவுக்குக் கடத்தும் பொருள்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகளை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என தேசிய காவல் படையின் எல்லைக் கட்டுப்பாடு பாதுகாப்புப் பிரிவின் (AKPS) இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily Mohd Zain தெரிவித்துள்ளார். இதற்கான முன் நடவடிக்கையாக விசாரணையில் இருக்கும் அதிகாரிகளை அழைத்து விரைவாக விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாக Datuk Seri Mohd Shuhaily Mohd Zain தெரிவித்தார். சட்டவிரோதமாக மலேசிய எல்லைக்குள் ஊடுருவும் கடத்தல்காரர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து வரும் ஒரு சில காவல் அதிகாரிகளைத் தாம் அடையாளம் கண்டிருப்பதாக AKPS இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily Mohd Zain தெரிவித்தார்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி கீழ்மட்ட காவல் அதிகாரிகளைக் கடத்தலைக் கண்டும் காணாமலும் இருக்கும்படி வலியுறுத்தும் ஒரு சில மேலதிகரிகளிடமிருந்து தமது விசாரணை தொடங்கும் என AKPS இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily Mohd Zain வலியுறுத்தினார். இனி தேசிய எல்லை பகுதிகளில் கண்டெடுக்கப்படும் கடத்தல் பொருள்கள் மீது தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் எல்லைக் கட்டுப்பாடு பாதுகாப்புப் பிரிவின் கீழ் இயக்கும் துறைகளை இணைத்து வழிநடத்தவிருப்பதாகவும் AKPS இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily Mohd Zain தெரிவித்தார்.
Polis akan memecat serta-merta mana-mana pegawai yang terbabit menyalahgunakan kuasa dengan memberi sokongan kepada sindiket penyeludupan di sempadan. Datuk Seri Mohd Shuhaily menegaskan siasatan dalaman sedang berjalan untuk mengesan pegawai yang berkomplot.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



