RM25,000 லஞ்சம் பெற்ற காவல் அதிகாரி கைது!

top-news

மே 20,

திரங்கானுவில் உள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து தொடர்ச்சியாக லஞ்சம் பெற்ற காவல் அதிகாரி லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். 30 வயதுள்ள காவல் ஆணையர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் RM25,000 க்கும் மேலான தொகையை லஞ்சமாகப் பெற்றிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாகத் திரங்கானு மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Hazrul Shazreen Abd Yazid தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட 30 வயதுள்ள காவல் ஆணையர் தனது மனைவியின் வங்கியைப் பயன்படுத்திய இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றதாகவும் மேலதிக விசாரணைக்காக இன்று முதல் 5 நாள்கள் விசாரணைக் காவலில் தடுத்து வைக்கும்படி Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் திரங்கானு மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Hazrul Shazreen Abd Yazid தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற விசாரணைக்காகக் காவல் அதிகாரி திரங்கானு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் திரங்கானு மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Hazrul Shazreen Abd Yazid தெரிவித்தார்.

Seorang pegawai polis berusia 30 tahun ditahan SPRM Terengganu kerana disyaki menerima rasuah melebihi RM25,000 daripada sebuah syarikat swasta sejak tahun 2020. Wang tersebut diterima melalui akaun bank isterinya. Dia kini direman selama lima hari.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *