போலி அழைப்பால் RM500,000 இழந்த தனியார் நிறுவன அதிகாரி!

top-news

ஜுலை 10,


பணமோசடியால் தாம் ஈடுபட்டதாக நபர் ஒருவர் கூறியதை நம்பி தனியார் நிறுவன அதிகாரி RM500,000 பணத்தை இழந்துள்ளார். கடந்த மே மாதம் அவருக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாகவும் அழைத்தவர் தம்மைக் காவல் அதிகாரி என தெரிவித்ததாகவும் கள்ள பணம் பறிமாற்றத்தில் அவர் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அந்த வழக்கிலிருந்து வெளியேற வேண்டும் எனில் பிணை தொகையாக RM500,000 செலுத்த வேண்டுமென மிரட்டப்பட்டதால் 44 வயது தனியார் நிறுவன அதிகாரி RM500,000 பணத்தை வழங்கியதாகப் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட 44 வயது தனியார் நிறுவன அதிகாரி RM500,000 பணத்தை 9 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குச் செலுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டிருப்பதாகவும் சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்குகளைச் சோதனையிட்டதில் அனைத்து வங்கிக் கணக்குகளும் போலியான நபர்களால் செயல்படுத்தப்பட்டு வந்ததாக பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *