விபத்தில் ராணுவ அதிகாரி பலி! வாகனமோட்டி கைது!
- Thinagaren Sanggaren
- 11 Jul, 2025
ஜுலை 11,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தியதில் மோட்டார் சைக்கிளோட்டியான இராணுவ அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று இரவு 8 மணியளவில் மலாக்காவில் உள்ள Jalan Tangga Batu சாலையில் இந்த நிகழ்ந்ததாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மத்திய மலாக்கா காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். விபத்தில் பலியான மோட்டார் சைக்கிளோட்டி 26 வயதான Muhammad Haqimy எனும் இராணுவ அதிகாரி என அடையாளம் காணப்பட்டிருப்பதாக மத்திய மலாக்கா காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்.
சுங்கை
உடாங்கிலிருந்து டாங்கா பத்து நோக்கிச் சென்று கொண்டிருந்த Proton Gen 2 வாகனம் திடீரென எதிர்பாதைக்குள் நுழைந்ததால் எதிரில் வந்துக்
கொண்டிருந்த இராணுவ அதிகாரியின் மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தியிருப்பதாக
முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படும் 31 வயதான
Proton Gen 2 வாகனமோட்டி சிராய்ப்புக் காயங்களுக்குள்ளான
நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் காவல்துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரித்து
வருவதாக மத்திய மலாக்கா காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



