பெஜூவாங், பெர்சத்து இணைவது குறித்து பேச்சுவார்த்தை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 13-

பெஜுவாாங் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ முக்ரிஸ் மகாதீரும் பெர்சத்து கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ முகைதின் யாசினை இன்று காலை  சந்தித்து அவ்விரு கட்சிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு கோலாலம்பூரில் உள்ள புக்கிட் டாமன்சாராவில் நடைபெற்றது.

அந்த சந்திப்பில், இரு கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் எதிர்கால அரசியல் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு தலைவர்களும் தங்களது கட்சித் தோழர்களுடன் சேர்ந்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

“இந்த சந்திப்பின் இறுதியில், பெஜூவாங் மற்றும் பெர்சத்து கட்சிகள் இனத்திற்காகவும், மதத்திற்காகவும், நாட்டிற்காகவும் நடைபெறும் போராட்டத்தை பாதுகாக்க இணைந்து செயல்பட உறுதியும் தீர்மானமும் எடுத்துள்ளன,” என்று அந்த முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அக்மத் பைசல் அசுமு மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ முகமது அஸ்மின் அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் பெஜூவாங் கட்சியின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *