மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 24 May, 2025
மே 24,
பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 31 வயது ஆடவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மலாக்கா ஆயேர் கெடோவில் உள்ள உணவகத்திற்குச் சென்றுக் கொண்டிருந்த 21 வயது பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சமூகவலைத்தளத்தில் பரவிய lelaki miang எனும் ஆடவரைக் காவல்துறை செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பானக் காணொலியைச் சமூகவலைத்தளத்தில் பகிர வேண்டாம் என்றும் மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit கேட்டுக் கொண்டார்.
காலை 8.30 மணிக்குப் பல்கலைக்கழக மாணவி ஆயேர் கெரோவில் உள்ள உணவகத்திற்குச் செல்லும் வழியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட ஆடவரைக் காவல்துறையினர் அதிகாலை 1 மணிக்குப் புக்கிட் பெருவாங்கில் உள்ள உணவகத்தின் பின்னால் கைது செய்தததாகவும் கைது செய்யப்பட்ட ஆடவர் 31 வயது பாக்கிஸ்தான் நாட்டு ஆடவர் என்றும் Christopher Patit தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பாக்கிஸ்தான் ஆடவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் மீது முந்தைய குற்றப்பதிவுகள் இருப்பதையும் காவல்துறை உறுதி செய்துள்ளது.
Seorang lelaki Pakistan berusia 31 tahun ditahan polis kerana disyaki melakukan gangguan seksual terhadap pelajar universiti di Melaka. Kejadian berlaku di Ayer Keroh dan video mangsa tersebar di media sosial. Polis nasihatkan orang ramai agar tidak menyebarkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *