வெளிப்புற நடவடிக்கைகளுக்கான SOP மறுபரிசீலனை – கல்வி அமைச்சு
- Surendran Sumdraraj
- 07 Apr, 2026
புத்ராஜெயா, ஏப். 7-
கல்வி அமைச்சு(KPM), தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நடைபெறும் வெளிப்புற் செயல்பாடுகளுக்கான நடைமுறை செயல்முறை (SOP) வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்து வருகிறது.
கல்வி அமைச்சர் படிலினா சிடெக் தெரிவித்ததாவது, கடந்த சனிக்கிழமை பந்தாய் மெர்டேகாவில் நடைபெற்ற வெளிப்புற கல்வி நிகழ்ச்சியின் போது பெர்லிஸ் ஆசிரியர் பயிற்சி கல்லூரி (IPG) மாணவர்-ஆசிரியர்கள் இருவர் உயிரிழந்த விபத்துக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்குக் கல்வி அமைச்சு முழுப்பொறுப்பையும் ஏற்கிறது என்றும் அவர் கூறினார்.
“இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காக வெளிப்படையான, முழுமையான மற்றும் ஆழமான விசாரணை நடைபெற்று வருகிறது. விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், அதற்கான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள்,” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் SOP-களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



