அடுத்த ஆண்டு முதல் அனைத்து உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கும் இரு புதிய கட்டாயப் பாடங்கள் அறிமுகம்

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

கோலாலம்பூர, நவ. 22-

நாட்டின் இளைய தலைமுறையினரிடையே தேசியம் , அரசியலமைப்பு பற்றிய புரிதலை வளர்க்கும் நோக்கில், அடுத்த ஆண்டு முதல் மலேசியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இரு புதிய கட்டாயப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

‘தேசிய இன ஒருமைப்பாட்டு நோக்கு’ (Aspirasi Pembinaan Negara Bangsa), ‘தற்காலத் தத்துவமும் சிந்தனையும்’ (Falsafah dan Pemikiran Kontemporari) ஆகிய இரு புதிய பாடத் திட்டங்களும் பொது பாடத்திட்டம் பிரிவின் கீழ் இடம்பெறும். இவை முன்பிருந்த ‘நெறிமுறையும் நாகரிகமும்’ (Etika dan Peradaban) பாடத்தை முழுமையாக மாற்றி அமைத்ததன் விளைவாக இந்த இரு பாடத்திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளன. மேலும் ‘நெறிமுறையும் நாகரிகமும்’ பாடமே 2018-இல் ‘இன உறவுகள்’ (Hubungan Etnik) என்ற பெயரிலிருந்து மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொது பாடத்திட்ட மறு ஆய்வுக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அம்ரி பஹாருடின் இதுபற்றி கூறுகையில், “இந்த இரு புதிய பாடங்களும் பலதுறை கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக் போன்ற கல்வி நிலையங்களில் பயிலும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கட்டாயமாக்கப்படும்” என்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *