10,000 பேருக்கு PTPTN உதவி அதிகரிப்பு-பிரதமர்
- Tamil Malar (Reporter)
- 20 Jan, 2026
புத்ராஜெயா, ஜன. 20-
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் நோக்கில், அரசுப் பல்கலைக்கழகங்களில் (IPTA) பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் PTPTN இலவச கல்வி உதவி இந்த ஆண்டில் 10,000 மாணவர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
இந்த எண்ணிக்கை, கடந்த அக்டோபரில் 2026 பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட 5,800 கடும் வறுமை நிலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்கு மேலதிகமாகும் என அவர் தெரிவித்தார்.
2026–2035 தேசிய கல்வித் திட்டம் அறிமுக விழாவில் உரையாற்றிய பிரதமர், “கல்வி என்பது உரிமை. வறுமை ஒரு தடையாக மாறக் கூடாது. அதனால்தான் ஆரம்ப கட்டமாக 5,800 மாணவர்களுக்கு இலவச கல்வியை அறிவித்தோம். இப்போது, PTPTN வழியாக இந்த உதவியை 10,000 ஏழை மாணவர்களாக உயர்த்துகிறோம்,” என்றார்.
இந்த நடவடிக்கை, பொருளாதார சிரமம் காரணமாக கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



