கொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 20,

பண்டார் உத்தாமா இடைநிலைப்பள்ளியில் கொலை செய்யப்பட்ட 16 வயது மாணவியான Yap Shing Xuen எனும் மாணவியின் இறுதி ஊர்வலம் இன்று தலைநகரில் நடைபெற்றது. அவரின் இறுதி ஊர்வலத்தில் இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார். பள்ளிகளில் கைப்பந்து விளையாட்டாளராக மிளிர்ந்த Yap Shing Xuen என்பதால் தேசிய கைப்பந்து அணியின் JERSEY-ஐ அவரின் உடலில் போர்த்தி ஹன்னா இயோ அஞ்சலி செலுத்தினார். 

கொலை செய்யப்பட்ட 16 வயது மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பண்டார் உத்தாமா இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவரின் உடல் ஷா அலாமில் உள்ள நிர்வாணா மயானத்தில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களாகப் பல சமூகத் தலைவர்களும் கல்வியாளர்களும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *