பள்ளி மாணவி கத்திக்குத்து! பள்ளிக்கு விரைந்த கல்வி அமைச்சர் FADHLINA SIDEK!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 7,

இன்று காலை பந்திங் இடைநிலைப்பள்ளி மாணவிக் கத்தியால் குத்தப்பட்ட சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளிக்குக் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பாதுகாவலர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மாணவிக்குச் சிகிச்சைகள் அனைத்தும் தடையின்றி கிடைக்க சுகாதார அமைச்சு உறுதி அளித்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார். 

பெண் மாணவியைக் கத்தியால் குத்திய மற்றொரு மாணவி தற்போது காவல்துறையின் விசாரணையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் மேலதிக தகவல்களைத் தொடர்ந்து தாம் வழங்குவதாக ஊடகத்தினருக்குக் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK உறுதியளித்தார். இப்போதைக்குப் பாதிக்கப்பட்ட மாணவி குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையின் விசாரணைக்குக் கல்வி அமைச்சும் மாநிலக் கல்வி இலாகாவும் முழு ஒத்துழைப்பு வழங்குவதுடன் பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்கும் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK உறுதி அளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *