பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்து மாணவர் காயம்
- Surendran Sumdraraj
- 03 Mar, 2026
சுங்கை பட்டாணி, மார்ச் 3-
இங்குள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் ஆண்டு மாணவர் ஒருவர் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் நேற்று ஏற்பட்டது.
கெடா மாநில கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் தொடர்பாக ஆரம்ப விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது துன்புறுத்தல் (bullying) அல்லது எந்தவொரு குற்றச்செயலுடனும் தொடர்புடையதல்ல எனத் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், தாமான் ரியா ஜெயா இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை கூட்டம் முடிந்ததும் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு மாணவர் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், பள்ளியின் பிளாக் ஏ கட்டிடத்தின் கீழ்பகுதியில் மாணவர் ஒருவர் தரையில் படுத்திருப்பதை ஒரு துப்புரவு பணியாளர் கவனித்துள்ளார். உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கும் அவசர உதவி சேவைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
மாணவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கல்வித் துறை அறிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



