ஆசிரியரைத் தாக்கிய படிவம் 2 மாணவன்! கல்வி அமைச்சர் கண்டனம்!
- Thinagaren Sanggaren
- 30 Jul, 2025
ஜூலை 30,
இடைநிலைப்பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியரைத் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது குறித்து கல்வி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார். காஜாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் இச்சம்பவம் நடந்ததாகவும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 14 வயது படிவம் 2 மாணவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காஜாங் மாவட்டக் காவல்துறை தலைவர் Naazron Abdul Yusof தெரிவித்திருந்தார்.
வகுப்பை மட்டம் போட்டு நண்பர்களுடன் சுற்றிய மாணவரை ஆசிரியர் கண்டிக்கும் போது அம்மாணவர் ஆசிரியரின் முகத்தில் குத்தியதாகவும் ஆனால் ஆசிரியர் மீண்டும் அம்மாணவரைத் தாக்காமல் சிரித்தபடி அம்மாணவரைக் கட்டுப்படுத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணைக்காக 14 வயது மாணவர் 2 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தற்காலிகமாக அம்மாணவர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் துறையின் விசாரணைக்குப் பின்னர் கல்வி அமைச்சின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உரிய நடவடிக்கை எடுக்கும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



