கற்றல் மேட்ரிக்ஸ்: தரவரிசை கலாச்சாரம் மீண்டும் வராது – கல்வி அமைச்சர் உறுதி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 23-

நான்காம் ஆண்டு மற்றும் மூன்றாம் படிவ மாணவர்களுக்கான கற்றல் மேட்ரிக்ஸ் (Matriks Pembelajaran) அமலாக்கம், பள்ளி தரவரிசை அல்லது மாணவர் மதிப்பீட்டு கலாச்சாரத்தை மீண்டும் உருவாக்காது என கல்வி அமைச்சர் படீலினா சிடேக்  உறுதியளித்தார்.

இந்த முயற்சி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தாது. மாறாக, பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டு (PBS) துறையின் ஒருங்கிணைந்த கல்வி மதிப்பீட்டு முறைமைக்குள் துல்லியமும், நேர்மையும் கொண்ட தலையீட்டு நோக்கத்துடன் இது செயல்படுத்தப்படும் என்றார்.

மேலும், இந்த கற்றல் மேட்ரிக்ஸ் முழுமையாக தேர்வு வாரியத்தின் மூலம் மையப்படுத்தப்பட்ட முறையில் நடத்தப்படும். மதிப்பீட்டு கருவிகள், மதிப்பெண் அளவுகோல்கள் மற்றும் முடிவு சீட்டுகள் அனைத்தும் தேர்வு வாரியத்தால் தயாரித்து வழங்கப்படும்.

“ஆசிரியர்கள் தனியாக கருவிகளைத் தயாரிக்க வேண்டியதில்லை. அனைத்தும் தேர்வு வாரியத்தின் மூலம் தயாரித்து வழங்கப்படும்,” என அமைச்சர் விளக்கினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *