பள்ளியில் 16 வயது மாணவி குத்திக் கொலை! 14 வயது மாணவன் கைது! – PETALING JAYA
- Thinagaren Sanggaren
- 14 Oct, 2025
அக்தோபர் 14,
பண்டார் உத்தாமா இடைநிலைப்பள்ளியில் 16 வயது மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த 14 வயது மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழிப்பறையிலிருந்து 16 வயது மாணவி உயிருடன் மீட்கப்படும் காணொலிகள் சமூகவலைத்தலங்களில் பரவி வருகிறது. பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பண்டார் உத்தாமா இடைநிலைப்பள்ளியின் கழிப்பறையில் இன்று காலை 9.30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் தப்பி ஓட முயன்ற 14 வயது மாணவனை ஆசிரியர்களும் மாணவர்களும் சுற்றி வலைத்ததாகவும் பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Shamsudin Mamat தெரிவித்தார்.
படுகாயத்துடன் மீட்கப்பட்ட 16 வயது மாணவி உயிரிழந்ததைச் சுகாதாரப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர். சம்பவம் நிகழ்ந்த அடுத்த 5 நிமிடத்தில் சுகாதாரப் பணியாளர்களும் காவல் அதிகாரிகளும் பள்ளிக்கு விரைந்ததாகவும் ஆயுதங்களுடன் இருந்த 14 வயது அதே இடைநிலைப்பள்ளி மாணவரைக் கைது செய்ததாகவும் Shamsudin Mamat தெரிவித்தார். கத்தியால் தாக்கிய 14 வயது மாணவன் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் முழுமையான விசாரணைக்குப் பின்னர் காவல் துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் Shamsudin Mamat உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



