விளையாட்டு வீரர்களின் சம்பளத்தைக் கொடுங்கள்! – முன்னாள் பயிற்சியாளர் குற்றச்சாட்டு!
- Thinagaren Sanggaren
- 31 Jul, 2025
ஜூலை 31,
கால்பந்தாட்டத்தில் விளையாடும் விளையாட்டாளர்களுக்கு முறையாகச் சம்பளத்தை வழங்கினாலே மலேசியாவில் சிறந்த விளையாட்டாளர்கள் உருவாகுவார்கள் என KL CITY கால்பந்து அணியின் முன்னாள் பயிற்றுநர் Bojan Hodak குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பயிற்றுநர்களுக்கான சம்பளத்தைக் கூட அவர்கள் முறையாக வழங்குவதில்லை என்பதை Bojan Hodak மேற்கோள் காட்டினார். கால்பந்து லீக்கில் பங்கேற்பது என்பது ஒரு பெருமையாகக் கருதப்பட்டாலும் ஓர் அணியின் நிதிநிர்வாகத்துவம் அவசியம் என Bojan Hodak தெரிவித்தார்.
உள்நாட்டு விளையாட்டாளர்களுக்குச் சம்பளத்தைக் கொடுக்காமல் வெளிநாட்டிலிருந்து விளையாட்டாளர்களைக் கொண்டு வருவதில் மலேசியாவின் கால்பந்து அணிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருவதாக Bojan Hodak குறிப்பிட்டார். கால்பந்து அணியில் எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது என்பதை விடவும் முதலீடுகளால் பெறப்பட்ட நிதியை எப்படி செயல்படுத்துகிறோம் என்பது குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என Bojan Hodak தெரிவித்தார். வெளிநாட்டு விளையாட்டாளர்களை உள்ளூர் அணிகளுக்காக வாங்குவதில் தமக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் ஆனால் சில அணிகள் தன் சொந்த விளையாட்டாளர்களுக்குச் சம்பளத்தைத் தாமதமாக வழங்கி வெளிநாட்டு விளையாளர்களைக் கொண்டு வருவதில் அதிக ஈடுபாடுகளைக் காட்டுவதாகவும் Bojan Hodak தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



