பார்ம் பிரெஷ் பெர்ஹாட்: பள்ளி பால் திட்டத்தில் 2029 வரை தொடரும் கூட்டாண்மை
- Tamil Malar (Reporter)
- 17 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 17-
மலேசியாவின் மிகப்பெரிய உள்நாட்டு பால் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பார்ம் பிரெஷ் பெர்ஹாட், கல்வி அமைச்சுடன் (KPM) இணைந்து பள்ளி பால் திட்டத்தை (Program Susu Sekolah - PSS) 2025 முதல் 2029 வரை தொடர்ந்து செயல்படுத்தும் என அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் பாட்லினா சிடிக் கூறுகையில், ஊட்டச்சத்து குறைபாடு, ஊட்டக்குறைப்பிரச்சினையை எதிர்கொள்ளும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டம் உதவும் என்றார். இது (RMT) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
பார்ம் பிரெஷ் நிறுவனத்தின் பால் நாடு முழுவதும் 3,841 தொடக்கப்பள்ளிகளில் உள்ள 381,000 தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சென்றடையும். குறிப்பாக, புறநகர் பகுதிகள், தீவுகளில் உள்ள பள்ளிகளும் இதில் அடங்கும்.
"ஒவ்வொரு RMT மாணவரும் போதுமான ஊட்டச்சத்து பெற்று, உடல், மனம் , உணர்வு ரீதியான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. இது அவர்களின் கல்வித்திறனை முழுமையாக வெளிப்படுத்த உதவும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



