போதையில் வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து! ஒருவர் பலி!

- Sangeetha K Loganathan
- 04 Apr, 2025
ஏப்ரல் 4,
ஜொகூரிலிருந்து தஞ்சோங் லாபோ செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மற்றொரு வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 59 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவரின் மகனான 29 வயது ஆடவர் படுகாயம் அடைந்ததாகவும் Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.
இன்று அதிகாலை 24 வயது இளைஞர் போதையில் வாகனத்தைச் செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. விபத்துக்குக் காரணமான 24 வயது இளைஞர் methamphetamine வகை போதைப்பொருளைப் பயன்படுத்தியிருப்பது சோதனையில் உறுதிச்செய்யப்பட்டிருப்பதாகவும் விபத்தில் பாதிக்கப்பட்ட 29 வயது இளைஞர் Sultanah Nora Ismail மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.
Seorang wanita berusia 59 tahun maut manakala anak lelakinya cedera parah selepas kenderaan mereka dirempuh oleh pemandu di bawah pengaruh dadah di Batu Pahat. Pemandu berusia 24 tahun disahkan positif methamphetamine.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *