அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய E-HAILING ஓட்டுநர் கைது!
- Thinagaren Sanggaren
- 25 Sep, 2025
செப்டம்பர் 25,
தலைநகரில் சாலையைக் கடக்கும் பெண் ஒருவருக்கு வழிவிடாமல் சமிஞ்சை விளக்கை மீறி வாகனத்தைச் செலுத்திய ஆடவரைக் காவல்துறை கைது செய்திருப்பதாகக் கோலாலம்பூர் துணைக் காவல் ஆணையர் Datuk Mohamed Usuf Jan Mohamad தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட வாகனத்தின் அடையாள எண்ணை வைத்து 42 வயது E-HAILING ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கோலாலம்பூர் துணைக் காவல் ஆணையர் Datuk Mohamed Usuf Jan Mohamad தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்று காலை 8.15 மணிக்கு
தலைநகர் மெர்டேக்கா சாலையில் நிகழ்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் இதுவரை எந்தவொரு புகாரும்
அளிக்காததால் கைது செய்யப்பட்ட வாகனமோட்டியிடம் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் கோலாலம்பூர் துணைக் காவல் ஆணையர் Datuk Mohamed Usuf Jan
Mohamad தெரிவித்தார். சம்பவத்தின் போது எந்தவொரு விபத்தும்
ஏற்படவில்லை என்பதால் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி
கோலாலம்பூர் துணைக் காவல் ஆணையர் Datuk Mohamed Usuf Jan Mohamad வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



