மலேசியா சிங்கப்பூர் எல்லை சுங்கச் சாவடியில் கைகலப்பு! இருவர் கைது!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 29,

சுங்கச் சாவடியில் இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்புத் தொடர்பான காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட இருவரையும் காவல்துறை கைது செய்திருப்பதாகத் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் நுழைவாயில் சுங்கச் சாவடியில் நிகழ்ந்ததாக Raub Selamat தெரிவித்தார்.

கைகலப்பில் ஈடுப்பட்ட 28 வயது e-hailing ஓட்டுநரும் 43 வயது தனியார் பேருந்து ஓட்டுநரும் காயங்களுக்குள்ளான நிலையில் மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் இன்று காலை கைது செய்யப்பட்டிருப்பதாக தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். சுங்கச் சாவடியில் பேருந்து நுழைவாயிலில் e-hailing ஓட்டுநர் நுழைந்ததால் பேருந்து ஓட்டுநர் கோபமடைந்து e-hailing ஓட்டுநரைத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த இரு ஓட்டுநர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *