போதையில் உணவகத்திற்குள் காருடன் நுழைந்த ஆடவர் கைது!

top-news

மார்ச் 9,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் உணவகத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியதாகச் சமூகவலைத்தலங்களில் பரவிய காணொலித் தொடர்பான வழக்கில் விபத்தை ஏற்படுத்திய 46 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ஜொகூர் பாரு காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த மார்ச் 5 இரவு 10.50 மணிக்கு Jalan Dato Abdullah Tahir சாலையில் உள்ள உணவகத்தில் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட வாகனமோட்டி சிங்கபூரைச் சேர்ந்தவர் என்றும் மது போதையில் வாகனத்தைச் செலுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்தை மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உணவகத்தை மோதிய பின்னர் வாகனத்தை நிறுத்தாமல் அடாவடித்தனம் செய்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Raub Selamat தெரிவித்தார்.

Seorang lelaki Singapura berusia 46 tahun ditahan selepas memandu dalam keadaan mabuk dan terbabas masuk ke dalam sebuah restoran di Johor Bahru. Kejadian berlaku pada 5 Mac jam 10.50 malam. Suspek bertindak agresif selepas kemalangan menyebabkan polis mengambil tindakan menahannya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *