கிள்ளான் விபத்து: மதுபோதையில் மோதி உயிரிழப்பு ஏற்படுத்திய ஓட்டுநருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்
- Surendran Sumdraraj
- 30 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 30-
கிள்ளான் ஜாலான் ராயா பாராட் சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை மோதியதில் அவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் நான்கு நாட்களுக்கு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார்.
கிள்ளான் தெற்கு மாவட்ட காவல் துறை தலைவர் உதவி ஆணையர் லிம் ஜிட் ஹுவே, குறித்த நபர் இன்று முதல் வரும் வியாழக்கிழமை வரை ரிமாண்டில் வைக்கப்படுவார் என தெரிவித்தார்.
“மஜிஸ்திரேட் சித்தி சூபைடா மஹாத் ரிமாண்ட் உத்தரவை வழங்கியுள்ளார். மேலும் விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன,” என்றும் அவர் கூறினார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மதுபோதையிலும் போதைப்பொருள் பயன்பாட்டிலும் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் ஒருவர் மோட்டார் சைக்கிளை மோதியதில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



