மூவர் உயிரிழப்பு – டிரெய்லர் ஓட்டுநருக்குத் தடுப்புக் காவல்
- Surendran Sumdraraj
- 03 Apr, 2026
சிகாமாட், ஏப். 3-
ஐந்து பேர் கொண்ட குடும்பம் பயணித்த வேனை பின்னால் இருந்து டிரெய்லர் மோதி, அதில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில், டிரெய்லர் ஓட்டுநர் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜொகூர் பாரு–சிரம்பான் சாலையின் 210-ஆம் கிலோமீட்டரில், தாமான் கோல்டன் ஹில் சந்திப்பு அருகே, நேற்று இந்த விபத்து நடைபெற்றது. இச்சம்பவத்தில் 29 வயதான சந்தேக நபர் இன்று சிகாமட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மாஜிஸ்திரேட் அமலினா ஜோஹார், சந்தேக நபரை இன்று முதல் திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த காவல் உத்தரவு, போலீசார் விசாரணையை முழுமையாக மேற்கொள்ள உதவுவதற்காக வழங்கப்பட்டது.
இந்த வழக்கு, சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 44 (1) (a) மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 15 (1) (a) கீழ் விசாரிக்கப்படுகிறது.
சிகாமட் மாவட்ட காவல் தலைவர், சுப்பரிண்டெண்ட் முகமட் ஜுமாஸன்சாஹிர் சேக் இஸ்மாயில், விபத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், சந்தேக நபர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



