எதிர் திசையில் வண்டி ஓட்டியவர் – போலீஸ் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 6-

பழைய கிள்ளான் பகுதியில் எதிர் திசையில் வாகனம் ஓட்டியதாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்ட ஓட்டுநர், நேற்று இரவு தானாகவே சரணடைந்து பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு (ஜேஎஸ்பிடி) தலைவர் உதவி கமிஷனர் முகமட் சம்சுரி முகமட் ஈசா தெரிவித்ததாவது, குறித்த நபர் இரவு 8.35 மணியளவில் ஜேஎஸ்பிடி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

“சந்தேக நபருக்கு மூச்சு பரிசோதனை (EBA) மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரு பரிசோதனைகளிலும் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

மேலும், ஆரம்ப விசாரணையில், குறித்த ஓட்டுநர் மிட் வேலி நோக்கி செல்லும் போது தவறான பாதையில் சென்றதாகத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், போலீசார் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *