சபா சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் தொகுதி பங்கீடுகள்! Saifuddin விளக்கம்!

- Sangeetha K Loganathan
- 05 Jul, 2025
ஜூலை 5,
சபா சட்டமன்றத் தேர்தல் குறித்து பக்காத்தான் தெளிவாகச் செயல்பட்டு வருவதாக பக்காத்தான் ஹரப்பான் தேர்தல் குழுத் தலைவர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். தேர்தல் குறித்து உறுப்புக் கட்சிகளுடனும் கூட்டணிக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடுகள் குறித்து கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும் அனைத்து தரப்பினர்களும் திருப்தி அளிக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
தேர்தலில் பக்காத்தான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் தொகுதிகள் குறித்தான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுக்கானப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். இதே போல தான் மற்ற கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளிடையே கலந்தாலோசனை நடத்தப்பட்ட பின்னர் கூட்டணி கட்சிகளிடம் தொகுதிகள் குறித்து இறுதிச் செய்யும் என்றும் Datuk Seri Saifuddin Nasution Ismail விளக்கமளித்தார். சபா சட்டமனறம் எப்போது கலைக்கப்படும் என்பது குறித்து விரைவில் மாநில அரசு அறிவிக்கும் என்றும் சட்டப்படி நவம்பர் 11 வரையில் மாநில அரசு ஆட்சியில் இருக்கும் என Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
Datuk Seri Saifuddin Nasution menjelaskan Pakatan Harapan sedang mengadakan rundingan pembahagian kerusi bagi Pilihan Raya Negeri Sabah bersama parti komponen dan rakan gabungan. Rundingan dilakukan telus agar semua pihak berpuas hati. Tarikh pembubaran DUN diumumkan kelak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *