தேசிய ஹாலால் கொள்கை (DHN) இறுதிக் கட்டத்தில் உள்ளது – மே மாதத்தில் முழுமையாக நிறைவேறும்
- Tamil Malar (Reporter)
- 03 Feb, 2026
பாங்கி, பிப். 3 –
தேசிய ஹாலால் கொள்கை (Dasar Halal Negara - DHN) தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது என்றும், இந்த மே மாதத்தில் முழுமையாக நிறைவடையும் என்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ படில்லா யூசோப் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்கை, உள்ளடக்கமான, திட்டமிடப்பட்ட மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த ஹாலால் சூழலை உருவாக்குவதற்கான உத்தியோகபூர்வ வழிகாட்டியாக இருக்கும். இது ஜாகிம் (JAKIM ) மற்றும் மாநில இஸ்லாமிய மத வாரியங்கள் (MAIN) ஆகியவற்றின் தற்போதைய சான்றிதழ் அதிகாரத்தை பாதிக்காது என்று அவர் வலியுறுத்தினார்.
துணைப் பிரதமர், இந்தக் கொள்கை ஹாலால் துறையை வலுப்படுத்தி, உலக அளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் என்றார். 2019ஆம் ஆண்டு ஜாகிம் பெற்ற ISO/IEC 17065 சான்றிதழை விரிவுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது ஹாலால் சான்றிதழ் செயல்முறையை உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப உயர்த்தி, அனைத்துலக அங்கீகாரத்தை உறுதி செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



