2027 முதல் 1.25 லட்சம் நிர்வாக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 9-

தற்போது தரம் 1-ல் (கிரேடு 1) பணியாற்றி வரும் சுமார் 1,25,000 நிர்வாக உதவியாளர்கள் 2027 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கிரேடு 5 ஆக உயர்வு பெற உள்ளனர் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த பதவி உயர்வு மொத்தம் 1,26,828 பணியிடங்களை உள்ளடக்கியதாகும். இதில் 106,722 பேர் நிர்வாக உதவியாளர் (அலுவலக/செயல்பாடு) பதவியிலும், மேலும் 20,106 பேர் நிர்வாக உதவியாளர் (நிதி) பதவியிலும் பணியாற்றி வருகின்றனர்.

பொதுச் சேவை ஊதிய அமைப்பு (SSPA) மூலம் இந்த பதவி உயர்வு நடவடிக்கை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் அரசுப் பணியாளர்களின் சேவை நிலை மற்றும் ஊதிய அமைப்பை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கர் மற்றும் பொது சேவை இயக்குநர் தான் ஸ்ரீ வான் அகமட் டாலான் அப்துல் அசீஸ் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த முடிவு அரசுப் பணியாளர்களுக்கு ஊக்கத்தை அளிப்பதுடன், அவர்களின் சேவையை மேலும் திறம்பட முன்னெடுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *