13 வயது சிறுமி 2 முறை பாலியல் பலாத்காரம்! 20 வயது இளைஞர் கைது!

top-news

ஜூன் 3,

படிவம் 1 பயிலும் 13 வயது சிறுமியைத் தொடர்ச்சியாக இரு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் 20 வயது உள்ளூர் இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கோத்தா பாரு Sesyen நீதிமன்றத்தில் தன் மீதானக் குற்றத்தை மறுத்து ஜாமின் கோரியதுடன் நீதிமன்ற விசாரணையையும் கோரினார். வழக்கை விசாரித்த Sesyen நீதிமன்ற நீதிபதி Zulkifli Abllah பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடாது என்கிற நிபந்தனையுடன் RM10,000 ஜாமின் வழங்கினார்.

கைது செய்யப்பட்ட Muhammad Nasruldin Mohd Faizal எனும் 20 வயது இளைஞர் சம்மந்தப்பட்ட 13 வயது சிறுமியைக் கடந்த மார்ச் 13 இரவு 11 மணியளவில் Ketereh பகுதியில் உள்ள தோட்டத்திலும் அதனை அடுத்து மார்ச் 20 நள்ளிரவு 12 மணியளவில் அச்சிறுமியின் வீட்டில் என இரு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தாலும் கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞருக்கு எதிரான விசாரணை சாட்சியங்களை ஜூலை 2க்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி காவல்துறைக்கு Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Seorang pemuda berusia 20 tahun didakwa di Mahkamah Sesyen Kota Bharu atas pertuduhan melakukan gangguan seksual terhadap seorang remaja perempuan berusia 13 tahun. Tertuduh mengaku tidak bersalah dan dibenarkan jaminan RM10,000 dengan syarat tertentu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *