பயிற்சியின் போது ஆற்றில் விழுந்து இளைஞர் பலி!

top-news

ஏப்ரல் 1,


ஜொகூரில் உள்ள Asahan நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக Tangkak மாவட்டக் காவல் ஆணையர் ROSLAN MOHD TALIB தெரிவித்தார். இன்று காலை 9 மணியளவில் தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது அவர் நீரில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. 

மூழ்கிய 27 வயது இளைஞரைச் சுற்றியிருந்த பொதுமக்கள் மீட்டதாகவும் சுயநினைவின்றி இருந்த நிலையில் முதலுதவிகள் செய்யப்பட்டும் அவர் உயிரிழந்ததாக மருத்துவக் குழு உறுதிப்படுத்தியதாகவும் Tangkak மாவட்டக் காவல் ஆணையர் ROSLAN MOHD TALIB தெரிவித்தார். உயிரிழந்த 27 வயது இளைஞரின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக TANGKAK மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Seorang pemuda berusia 27 tahun lemas ketika menjalani latihan bersama rakan-rakannya di Air Terjun Asahan, Johor. Mangsa ditemui dalam keadaan tidak sedarkan diri dan disahkan meninggal dunia selepas diberikan rawatan kecemasan. Mayatnya dihantar ke Hospital Tangkak untuk bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *