கினபாத்தாங்கான் தொகுதி இடைத்தேர்தல்: நைம் மொக்தாரை வேட்பாளராக நியமிக்க அம்னோ வலியுறுத்து

top-news

மலாக்கா, டிச.17-

டத்தோ ஸ்ரீ பொங் மொக்தார் ராடினின் மறைவைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான நைம் மொக்தாரை, கினபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியின் பாரிசான் தேசிய முன்னணி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என பெமுடா அம்னோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தத் தொகுதியின் இடைத்தேர்தல் ஜனவரி 24, 2026 அன்று நடைபெறவுள்ளது.

பெமுடா அம்னோ தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மது அக்மல் சாலே, நைமின் உயர் அர்ப்பணிப்பு, தலைமைத்துவ திறமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நைம் தனது தந்தையைப் போன்றே மக்களை நெருக்கமாக அணுகி, உள்ளூர் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டவர் என்று அவர் கூறினார்.

உதவி பொருளாளரான நைம் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனவும், ஒழுக்கமான, கொள்கை உறுதியான மற்றும் அடிமட்ட மக்களுடன் நெருக்கமான நபர் எனவும் அக்மல் புகழாரம் சூட்டினார். குறிப்பாக கினபாத்தாங்கான் தொகுதியில் அவர் மிகவும் அறியப்பட்டவர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *