ஶ்ரீ நெகாரா புனரமைப்பு: நாட்டின் சுதந்திர அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சி - அன்வார் இப்ராஹிம்
- Tamil Malar (Reporter)
- 15 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 15-
கசானா நேஷனல் பெர்ஹாட்டால் மேற்கொள்ளப்பட்ட ஶ்ரீ நெகாரா புனரமைப்பு பணி வெறும் வரலாற்று கட்டடத்தை பழுதுபார்ப்பது மட்டுமல்ல, மாறாக காலனித்துவ பாரம்பரியத்திலிருந்து நாட்டின் அடையாளம், கண்ணியம், சுதந்திர ஆன்மாவை மீட்டெடுக்கும் அடையாளமாகும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இப்புனரமைப்பு நெகாரா மடானி கோட்பாட்டின் வெளிப்பாடாகும் என அவர் கூறினார். இது மக்களின் உள்ளடக்கம், அணுகல், உள்ளூர் வரலாறு, கலை, கலாச்சாரத்தை வலுப்படுத்துவதை வலியுறுத்துகிறது.
"இப்புனரமைப்பு வெறும் கட்டடக்கலை அழகை மட்டும் தொடுவதில்லை. மாறாக சுதந்திரத்தின் அர்த்தம், வரலாற்று அனுபவங்கள், முந்தைய தலைமுறையினர் சுதந்திர நாட்டுக்காகச் செலுத்திய விலையை ஆழமாகத் தோண்டி எடுக்கிறது" என்று அவர் கூறினார்.
ஶ்ரீ நெகாரா காலனித்துவ காலத்து பிரிட்டிஷ் அதிகாரிகளின் இல்லமாக இருந்தது. தற்போது புனரமைக்கப்பட்டு தேசிய பாரம்பரியமாக மாற்றப்பட்டுள்ளது. இம்முயற்சி நாட்டின் வரலாற்றை பாதுகாத்து இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



