மலாய் அல்லாதத் தலைவரை ஏற்க முடியாது! பாஸ் கட்சிக்குக் கெராக்கான் தேவையில்லை! – பினாங்கு பாஸ்

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 16,

பினாங்கு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் படுதோல்வி அடைந்ததற்குக் கெராக்கான் கட்சி முக்கிய காரணம் என பினாங்கு மாநில பாஸ் கட்சியின் உலாமா தலைவர் Mohd Shafirul Rozani குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில் பெரிக்காத்தானின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து கெராக்கான் கட்சியின் தலைவரான  Dominic Lauவை நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பினாங்கு மாநிலத்தின் பெரிக்காத்தான் தலைவராக மலாய்க்காரர் அல்லாதவர் நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகப் பினாங்கு மாநிலப் பாஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Hafis Alias தெரிவித்தார்.

கடந்த பினாங்கு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி 7 சட்டமன்றங்களையும் பெர்சத்துக் கட்சி 4 சட்டமன்றங்களையும் வென்றது. ஆனால் பெரிக்காத்தானின் பினாங்கு மாநிலத் தலைவரான Dominic Lauவின் கெராக்கான் கட்சி ஒரு சட்டமன்றத்தில் கூட வெற்றிப் பெறவில்லை என்றும் ஆனால் பெரிக்காத்தானின் மாநிலத் தலைவர் பதவியில் இருப்பதால் பாஸ் கட்சி இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதாகப் பினாங்கு மாநிலப் பாஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Hafis Alias தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *