MH 370 தேடுதலுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்! – பிரதமர் அன்வார்

top-news

டிசம்பர் 25,

மலேசியாவின் MH 370 விமானம் குறித்தான எந்தவொரு தகவலும் அறியாமல் தேடுதல் பணிகளைத் தொடர முடியாமல் மலேசிய அரசாங்கம் பின் வாங்கிய நிலையில் தற்போது மலேசிய அரசாங்கம் முழுமையாகத் தமது தேடுதல் பணியை மேற்கொள்ளும் என பிரதமர் அன்வார் நம்பிக்கை அளித்தார். 

MH 370 தேடுதல் பணிக்கான முன்மொழிவைப் பிரபல நிறுவனமான ROBOTIK MARIN OCEAN INFINITY நிறுவனம் வழங்கியிருக்கும் நிலையில் தற்போது அரசாங்கம் அதன் முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அன்வார் தெரிவித்தார்.

MH 370 விமானத்தைத் தேடும் பணியில் வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வந்தாலும் அதன் நடவடிக்கைகளில் மலேசியர்களும் முழுமையாக ஈடுபடுவார்கள் என அனவார் தெரிவித்தார். MH 370 விமானத்தின் இழப்பு மலேசியாவுக்கு உணர்வுப்பூர்மானதாக இருப்பதால் அதனைத் தேடும் பணியில் அரசாங்கம் தொடர்ந்து தீவிரம் காட்டும் என பிரதமர் அன்வார் நம்பிக்கை அளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *